சட்டசபை தேர்தலில் கூட்டணி: ராமதாஸ், சசிகலா அறிவிப்பு
விழுப்புரம்: வரும் சட்டசபை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக, புதிதாக கட்சி துவக்கியுள்ள சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு வரும் 23ம் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், அதிமுக பாஜ தனி கூட்டணியாகவும் எதிர்கொள்கின்றன. நாதக, தவெக தனித்து களமிறங்க உள்ளன.
இந்நிலையில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள சசிகலா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார். அப்போது, பாமக கவுரவ தலைவர் மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது சசிகலாவும், ராமதாசும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து கூட்டணி அமைக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும் தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதாக இந்த கூட்டணி செயல்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
விடியலின் விருப்பப்படி கூட்டணி...
கூட்டணி அல்ல கும்மியடி + கும்மாங்க்குது.
இந்த ரெண்டு கிழங்களும் நம்ம விடியலின் பினாமிகள் பி டீம். இவனுங்க admk /pmk மவன் கட்சி எங்கு நிக்குதோ அங்கையே இவனுக நின்னு ஆட்டையை கலைப்பனுவ இதுக்கு கொஞ்சம் பா கிடய்க்கும். இந்த புழைப்புக்கு வேற ஏதாவது தொழில் பார்க்கலாம்
தேர்தல் என்றாலே அரசியல்கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான் அப்போதுதான் அவர்களுக்கு திருவிழா திருநாள் அது முடிந்ததும் இருக்கும் இடமே தெரியாமல் சென்றுவிடுவார்கள் சசிகலா ஒரு முதலமைச்சரையே தீர்த்துக்கட்டிய பெண்மணி அவருடன் பிள்ளையை கட்சியிலிருந்தே ஒதுக்கிய நபரா கூட்டணி சொல்லவே நா கூசுகிறது இவர்களெல்லாம் மனிதர்களா இல்லை இல்லை சொல்லக்கூடாது
வாய்தா போன இரண்டும் சேர்ந்து எதைக் கிழிக்கப் போகிறார்களோ
இதுவே வெற்றி கூட்டணி .. இனி மற்றவர்கள் ஒதுங்கி விடலாம்..இது 190 இடம் வெல்லும் ..: :
அன்று... இதே சசிகலாவுடன் உறவு கொண்டாடி ஜெயலலிதா தனது சொந்த வாழ்க்கை, அரசியல் வாழ்க்கைகளை தொலைத்தார். அதே கதிதான் இந்த ராமாதாசுக்கும். ராமதாஸ் அவர்களே முதலிலேயே ஒதுங்கிவிடுங்கள் சசிகலாவிடமிருந்து.
அப்போ யாருக்கு யாரு பொட்டி கொடுக்குறது?
0+0=0
இண்டி கூட்டணி, தேஜ கூட்டணி, தவெக இவர்கள் பாடு திண்டாட்டம்தான். என்ன வியூகம் வகுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. சீமான், பாவம். தேர்தலில் திடீர் திருப்பம்.மேலும்
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
-
பரமக்குடி கேதார கவுரீஸ்வரி கோயில் பூச்சொரிதல் விழா