அழிக்கப்படாத, கிழிக்கப்படாத விளம்பரங்கள்

ஈரோடு,: சட்டசபை தேர்தல் நடத்தை விதி அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்க-ளான நிலையிலும், ஈரோடு மாநகரில் பல இடங்களில், பொது இடங்களில் சுவர் விளம்பரம் அழிக்கப்படவில்லை. போஸ்டர் அகற்றப்படவில்லை.


குறிப்பாக ஆளுங்கட்சியினரின் சின்னம், கொடி, பெயர், அவர்-களின் கூட்டணி கட்சியினரின் விளம்பரம், போஸ்டர் அகற்றப்ப-டவில்லை என்று, எதிர்க்கட்சி தொண்டர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கிழித்தவரை, அகற்றியவரை போதும் என்று, தேர்தல் பிரிவு அலுவலர்கள் நினைத்து விட்டார்களா? அல்லது எதிர்க்கட்சியினர் புகார்தான் உண்மையா? என்பதை அவர்-கள்தான் சொல்ல வேண்டும்.

Advertisement