கால்வாயில் பைக் பாய்ந்த விபத்தில் டிரைவர் சாவு

அந்தியூர்: அந்தியூர் அருகே அந்தியூர் குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகரன், 35; பிக்கப் வேன் டிரைவர். மனைவியை பிரிந்து தனியாக வசித்தார். இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

அள-வுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அந்தியூரிலிருந்து வீட்டுக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்றார். ஜீவா செட் ரோட்டில் காந்தி நகர் பிரிவில், மழை நீர் செல்லும் கால்வாயில் பைக் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement