குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த குமார் மகன் பிரகாஷ் 24. இவர் ராமநாதபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரை 30, வழிமறித்து மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கல்லால் ராஜ்குமாரை தாக்கினார். காயமடைந்த ராஜ்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் ராமநாதபுரம் நகர் போலீசார் பிரகாஷ்சை கைது செய்தனர்.
ஏற்கனவே பிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். அதன்படி, பிரகாஷ் ராமநாதபுரம் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்