பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பரமக்குடி: பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதியில் பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்கள் உட்பட ஸ்ட்ராங் ரூம் உள்ளிட்டவற்றை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பார்வையாளராக ஜம்மு காஷ்மீரில் இருந்து ரெஹானா பதுல் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பரமக்குடியில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் ஒரே இடத்தில் அமைந்துள்ள 11 ஓட்டுச்சாவடி மையங்களையும் பார்வையிட்டார்.
தாலுகா அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள ஸ்ட்ராங் ரூம்களை ஆய்வு செய்தார். உரப்புளி விலக்கு ரோடு மற்றும் மருச்சுக்கட்டி செக் போஸ்ட் வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழுவினரை ஆய்வு செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., சரவணப் பெருமாள் தொகுதி குறித்த நிலவரங்களை எடுத்துரைத்தார். உடன் தாசில்தார்கள் பரமக்குடி ராமமூர்த்தி, கமுதி ஸ்ரீராம் இருந்தனர்.
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்