தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், தேஜ கூட்டணியில் தங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆகியோரிடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி- சார்பில் தமிழகம் மீட்பு மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதி ஹிந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து 5 சட்டசபை தொகுதிகளில் தனிச் சின்னம் அல்லது இரட்டை இலை, தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கோர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், தேஜ கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆகியோரிடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சி பல ஆண்டுகளாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உறுதியான சித்தாந்த மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவாளராக இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தேசியவாத மற்றும் கலாசார விழுமியங்களை வலுப்படுத்த, அடிமட்ட அளவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இந்து சமூகம், மத உரிமைகள் மற்றும் நாகரிக விழுமியங்கள் தொடர்பான முக்கியப் பிரச்னைகளில் பொதுமக்களின் கருத்தைத் திரட்டுவதில் எங்கள் கட்சி தீவிரமாகப் பங்களித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாஜ மற்றும் அதிமுக தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர் வேற காமெடி அப்பப்ப பண்ணிக்கிட்டு
திராவிட கட்சிகள் அனைத்தும் ஹிந்து விரோத மற்றும் வோட்டு வங்கி அரசியல் செய்பவை. இவர்களை நம்ப முடியாது என்பது திருப்பரங்குன்றம் நடத்தையில் இருந்து தெளிவாகி விட்டது.
எனவே ஹிந்துக்களின் பாதுகாப்பிற்காக, அவர்கள் உரிமைக்காக இந்த மாதிரி கட்சிகள் வளர்வது அவசியம். அடுத்த 50 ஆண்டுகள் கடந்து ஹிந்துக்கள் தங்களின், தங்களின் குடும்ப பெண்களின், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்த மாதிரி கட்சிகளுக்கு வோட்டு அளிப்பது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
ஏற்கனவே பாசக்க உட்பட சிவசேனா போன்ற ஹிந்துத்வா கட்சிகளுக்கு ஹிந்துக்களின் ஆதரவு அல்லது ஹிந்துக்களின் வாக்குகளே குறி ..... இவை அனைத்தும் சுயநல அரசியல் நடத்துபவை ..... ஊழல் எதிர்ப்பு இவைகளின் நோக்கமல்ல .....
இந்த கருத்துக்கு பரக்கத் அலி என்பவர் எழுதிய பதிலுக்கு பதில்: பாஜக ஊழலை எதிர்க்கும் கட்சி தான். மத்திய பாஜக அரசிலோ அல்லது கர்நாடகம் தவிர்த்து பாஜக ஆளும் மாநிலங்களிலோ ஊழல் புகார் எதுவும் வெடிக்கவில்லை. முறைகேடுகள் இருக்கலாம். அவர்களது கொள்கைப்படி நடப்பதற்காக சிறிய அளவிலான அதிகார துஷ்பிரயோகம் நடக்க தான் செய்கிறது என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம். அதனால் பாஜகவிற்கு மட்டுமே போடும் ஓட்டு ஊழலை தவிர்க்க போடும் ஓட்டு தான். தமிழ் நாட்டில் இந்த தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிந்து அண்ணாமலை மீண்டும் தலைவர் ஆனால் அடுத்த சில தேர்தல்களில் ஊழலை எதிர்க்க தனித்து போட்டியிடும் அளவு பாஜக வலுப் பெறலாம்.
கோவையிலோ அல்லது கொங்கு மண்டலத்தின் பிற பகுதியிலோ ஒரு நாலு சீட்டாவது கேளுங்க,
டெங்கு காலரா போன்ற சனாதன தர்மம் இந்து மதக் கோட்பாடை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களுக்கு தமிழக மக்கள் இந்த சட்ட மன்ற தேர்தலோடு நிரந்தர விடை குடுக்காவிடில் வருங்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியே!
சிறுபான்மையினரது கட்சிகளுக்கு ஆதரவு தரும் தீம்கா என் இந்து மதம் சார்ந்தவர்களுக்கு ஆதரவு தருவதில்லை? கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் கோவில் நிலத்தை பிடுங்குவதற்கும் இவர்களுக்கு உரிமையைக் கொடுத்தது மிகப் பெரிய தீங்கு.
தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற நாட்டுப் பற்றுள்ள, மதவாதமற்ற ? இஸ்லாமியக் கட்சிகள் தான் போட்டியிட வேண்டுமா என்ன? ஹிந்து கட்சிகளும் ஜனநாயக நாட்டில் தாராளமாக போட்டியிடலாம். ஹிந்துகளுக்காக குரல் கொடுக்கும் அவர்களையும் வாழ்த்து கூறி வரவேற்போம்.
இதற்கு ஈபிஎஸ் ஒத்துக்கொள்வாரா என்பது சந்தேகம் ஏனென்றால் இவரும் திமுக போலவே சிறுபான்மையினர் தாஜா அரசியல் செய்பவர்.
பாஜக தனது பங்கிலிருந்து உள் ஒதுக்கீடு செய்யலாம். அர்ஜூன் சம்பத் குரல் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்க செய்வது காலத்தின் கட்டாயம்.
வளரும் முன்பே பதவி, அதிகார ஆசை ..... ஆகவே ஹிந்து அமைப்புக்களை ஹிந்துக்களே ஆதரிப்பதில்லை .....
வரவேற்பது நல்லது. இவர்களை தவிர அனைத்து இந்து சமய இயக்கங்களையும் ஒருங்கிணைந்து அவர்களையும் தேர்தலுக்கு பயன்படுத்தி ஓரிரு இடங்களில் போட்டியிட செய்து அங்கிகாரம் வழங்க வேண்டும்.
அதிமுக இவர்களுக்கு தொகுதிகள் வழங்க மறுத்துவிட்டால் பாஜக தனது தொகுதிகளில் உள் ஒதுக்கீடு வழங்கலாம். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க அண்ணாமலை அவர்களை பயன்படுத்தினால் நல்லது.
ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்.
எமெர்கெனசி இந்திரா கொண்டு வந்த போது, லோக் சபா 5 வருட காலம் முடிந்து , 6 ஆவது வருடம் இல்லேகால் தில் மத சார்பின்மை , சோசிலைசம் ரெண்டையும் சேர்த்தார்கள்.
அந்த அரசியல் சாசனத்தை தான் ராகுல் கையில் எடுத்துக்கொண்டு அலைகிறான்
நாடாளுமன்றம் 5 வருஷம் தான்.
6 ஆவது வருஷம் எமெர்கெனசி கொண்டு வந்ததால் அநியாயமாக செய்த செயல்.
அம்பேத்கர் அரசியல் சாஸனத்தில் இல்லாத ஒன்றை கொண்டு வந்தது இந்திரா காங்கிரஸ்.
நாம் டெங்கு, மலேரியா வாம்
ஹிந்துக்கள் இனியும் விழுதுகொள்ளவில்லை என்றால்
காசு வாங்கி வோட்டை போடாதீர்கள்
இனாம் க்கு வோட்டை போடாதீர்கள்
நம்மை நிந்தித்தவர்களுக்கு வோட்டை போடாதீர்கள்
இந்துக்கள் புரிந்து கொள்வது இருக்கட்டும். நீங்கள் எழுதியிருப்பது யாருக்குப் புரிகிறது.
எதுக்கு தனியா கட்சி நடத்திக்கிட்டு? தாமரையோடு ஐக்கியமாயிடலாமே.
இது அப்பாவித்தனமல்ல
இந்து மக்கள் கட்சியானது முஸ்லீம் லீக் கட்சி போல. ஆகவே பாஜகவுடன் ஐக்கியமாக முடியாது.
ஒரு நபர் கட்சிக்கு தலைவர் ஆக முடியுமா?மேலும்
-
டில்லிக்கு நேரடி விமான சேவை துவங்குகிறது 'ஏர் சீனா'
-
ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தல்
-
பா.ஜ.,வின் 'பி டீம்' தான் காங்கிரஸ் கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு
-
அரசு அதிகாரி தற்கொலை வழக்கு பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா
-
அனுமதிக்க மாட்டோம்!
-
இதே நாளில் அன்று