முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு

பொங்கலுார்:பி.ஏ.பி., முதல் மண்டலத்திற்கு இரண்டாம் சுற்றுப்பாசனம் நடக்கிறது.



இதில், திருப்பூர் பகிர்மான கால்வாய்க்கு உட்பட்ட கரைப்புதுார் பாசன மடைக்கு ஆறாவது நாளில் தண்ணீர் திறக்கப்படும். 9 நாள் ஆகியும் தண்ணீர் திறக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பாசன விவசாயிகள் பொங்கலுார் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எஸ்.டி.ஓ., சுபாஷினியிடம் முறையிட்டனர். திருப்பூர் பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் மணி உடன் இருந்தார்.

இது குறித்து உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



விவசாயிகள் கூறுகையில், 'தண்ணீர் குறைவாக வருவதால் பல்லடம் மட்டும் செல்கிறது. பல்லடம் பகுதி பாசனம் நிறைவடைந்த பின் எங்களுக்கு தருவதாக கூறினர். தண்ணீர் குறைவாக வந்தால் எங்கள் வாய்க்காலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காது. இதனால், பல்லடத்துக்கு தண்ணீர் திறக்கும் பொழுது எங்களுக்கும் சேர்த்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தண்ணீர் திறந்த ஆறாவது நாளிலேயே எங்கள் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்,' என்றனர்.

Advertisement