இந்திய வீரர்கள் கண்காணிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
புதுடில்லி: ஐ.சி.சி., ஒருநாள் உலக கோப்பை தொடர், 2027, அக்.,-நவ.,ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்க உள்ளது. இதில் இடம் பெற உள்ள 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா, கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உள்ளிட்ட 20 இந்திய வீரர்களை இப்போதே இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.
இவர்களது செயல்பாடுகளை பிரிமியர் தொடரின் போது, தேர்வுக்குழு தலைவர் அகார்கர் (மும்பை), உறுப்பினர்கள் ஷிவ் சுந்தர் தாஸ் (கோல்கட்டா), ஆர்.பி.சிங், அஜய் ரத்ரா (டில்லி), பிரக்ஞான் ஓஜா (பெங்களூரு, ஐதராபாத்) என அனைவரும், அந்தந்த நகரங்களில் நடக்கும் போட்டிகளை கண்காணிக்க உள்ளனர்.
வாரத்தில் 5 போட்டிகளை நேரிலும், மற்றவற்றை 'டிவி'யிலும் பார்க்க வேண்டும். பிரிமியர் தொடரில் புதியதாக விளாசும் வீரர்களை, ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணிக்கு தேர்வு செய்ய, முக்கியத்துவம் தரமாட்டர். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட வீரர்களின் உடற்தகுதி, செயல்பாடுகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
டெஸ்ட் அணியில் பும்ரா
இந்தியா வரவுள்ள ஆப்கானிஸ்தான் அணி பஞ்சாப்பின் முல்லன்புரில் ஒரு டெஸ்ட் போட்டியில் (ஜூன் 6-10) விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இப்போட்டி இடம் பெறவில்லை என்றாலும், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில், பும்ரா, சிராஜ் உட்பட, முன்னணி டெஸ்ட் வீரர்கள் அனைவரும் இடம் பெற உள்ளனர்.
அகார்கர் நீட்டிப்பா
இந்திய அணி முன்னாள் வீரர் அகார்கர், 48. கடந்த 2023 முதல் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவராக உள்ளார். இவரது பதவிக் காலம் வரும் செப்டம்பர் வரை உள்ளது. இதனை, '2027 உலக கோப்பை தொடர் (50 ஓவர்) வரை நீட்டிக்க வேண்டும்,' என அகார்கர் வேண்டுகொள் விடுத்ததாக செய்தி வெளியாகின.
இதை மறுத்த சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'' பி.சி.சி.ஐ., விதிப்படி சீனியர் தேர்வாளர் ஒருவர், தொடர்ந்து 4 ஆண்டு பணியில் இருக்கலாம். தனியாக பதவி நீட்டிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.
மேலும்
-
ஏப்., 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம்
-
ஏவுகணை தயாரிக்கும் திறனை ஈரான் இழந்துவிட்டதால் போர் விரைவில் முடியும்!: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இதே நாளில் அன்று
-
பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.
-
கூட்டணி கட்சி 'சீட்'டுக்கு வேட்டு வைக்கும் சீனியர்!
-
பேச்சு, பேட்டி, அறிக்கை