அரையிறுதியில் இந்திய ஜோடி

மோர்லஸ்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு இந்தியாவின் அர்ஜுன், ரித்விக் ஜோடி முன்னேறியது.

மெக்சிகோவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன், ரித்விக் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற ஜெர்மனியின் மார்க் வால்னர், ஜாகோப் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய ஜோடி 7-5 என வென்றது. இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 6-4 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 15 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் அர்ஜென்டினாவின் பகண்டோ, மெக்சிகோவின் ரோட்ரிகோ ஜோடியை சந்திக்க உள்ளது.

Advertisement