அ.தி.மு.க., கூட்டணியில் புதிய வரவுகள் இனி இல்லை: பழனிசாமி
''தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணிக்கு, இனிமேல் யாரும் வரப் போவதில்லை. பெரும்பாலான கட்சிகள், எந்தெந்த கூட்டணியில் சேர வேண்டுமோ, அங்கு போய் இணைந்து விட்டன. அதனால், தேர்தலை நோக்கி பயணிக்க வேண்டியது தான்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
டில்லி சென்றிருந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதை தொடர்ந்து, நேற்று சென்னை திரும்பும் முன், டில்லி விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
வெற்றி வாய்ப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் குறித்து ஆலோசித்தேன். ஐந்து மாநில தேர்தல் பணியால் அமித் ஷாவுக்கு வேலை அதிகம். தேர்தல் முடியும் வரை என்னால் டில்லி வர முடியாது என்பதால், முன்கூட்டியே அவரை சந்தித்தேன். தி.மு.க., கூட்டணி போல் எங்கள் கூட்டணி இல்லை.
நாங்கள் அமைதியாக கூட்டணி பேச்சை முடித்து, தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிடுவோம். எங்கள் தே.ஜ., கூட்டணியில், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, யார் யாருக்கு, எந்தெந்த இடத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்த தொகு திகளை ஒதுக்குவோம். நான்கு நாட்களில் எல்லாம் இறுதி செய்யப்படும்.
பிரசாரம்
த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என, ஏற்கனவே தெளிவாக சொல்லி விட் டேன். த.வெ.க., தலைவர் விஜயும் சொல்லி விட்டார். எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் த.வெ.க.,வினரை சந்திக்கவில்லை; அவர்களும் எங்களை சந்திக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும், எந்தெந்த கூட்டணியில் இணைய வேண்டுமோ அங்கு இணைந்து விட்டன. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்சிகள், அந்த கூட்டணியில் இணைந்து விட்டன. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்சிகள், எங்களுடன் சேர்ந்து விட்டன.
இனிமேல், யாரும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வரப் போவதில்லை. இனி தேர்தலை நோக்கி பயணிக்க வேண்டியது தான். ஏற்கனவே, எக்ஸ்பிரஸ் வேகத்தில் அ.தி.மு.க., பிரசாரம் போய் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமை. தொகுதிபங்கீடு முடிந்த பின்னரே, பிரசாரத்திற்கு யார் யார் வருவர் என்பது முடிவாகும். தமிழக அரசியல் குறித்து அமித் ஷாவுடன் ஆலோசிக்க, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் டில்லி வந்துள்ளனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், நடிகை பற்றி வாய் தவறி பேசியதை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார். அதன் பின், அதை பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது. தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
தே.ஜ., கூட்டணிக்கு த.வெ.க., வராது என்பது உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு பேச்சை துவக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து, தமிழகத்துக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
இன்று மதியம் 12:00 மணிக்கு, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளை, பீயூஷ் கோயல், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சந்தித்து, தொகுதி பங்கீடு பேச்சை துவக்குகின்றனர்.
அதை தொடர்ந்து, பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடக்கிறது. வரும் செவ்வாய் கிழமைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க, தே.ஜ., கூட்டணி முடிவு செய்துள்ளது.block_B
- நமது நிருபர் -
தமிழக அரசியல் களம்
தேர்தல் நேரத்தில் ஒரு விருவிருப்பான பழைய காலத்து ஜாம்பவான்கள் நடித்த சிவாஜி-எம்.ஜி.ஆர்- ஜெமினி
படம் பார்ப்பதை போல் இருக்கும் என எதிர்பார்த்த நமக்கு இந்த நாட்களில் வரும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களை போல் காட்சிகள் மாறாமல் சொன்ன விஷயத்தையே மாற்றி மாற்றி கூறி போரடித்து வருகிறார்கள். மொத்தத்தில் இரண்டு கட்சியில் இருக்கும் பெரிய மற்றும் சிறிய கட்சிகள் எதுவுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லை
உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி.
இவரை எந்த காரணத்தைக் கொண்டும் நம்பவே முடியாது. சிறிது சமயம் வாய்த்தாலும் பிஜேபியை கழட்டி விட்டு த வெ கவுடன் கூட்டணி சேர்ந்து விடுவார். எனவே டெல்லி தலைமை இவரை முழுமையாக நம்ப கூடாது. சிறிது ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.
அப்பவும் எடப்பாடி முதுகில் ஏறி ஓசி சவாரி செய்யத்தான் ஆசையாய்
நீங்க செலவழிக்கவே தயாராக இல்லை. அதனால் வரவும் இல்லை.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சிஎன்என் நியூஸ் 18 செய்தி ஊடகம் கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு 81.2% சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு, சிறப்பாக இருப்பதாக 80.7% மக்களும், நன்றாக இருக்கிறது என 7% மக்களும், பரவாயில்லை என 12.3% மக்களும் தெரிவித்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடிச்சிவிடு அடிச்சிவிடு காசா பணமா அடிச்சுவிடு ஏதோ இப்படி சொல்லியாவது சொறிஞ்சு விட்டுக்க..
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ரத்தங்கள்
திமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அனுதினமும் புதிய பிரச்னைகள் வெடிக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாத நிலையில் வயிற்றெரிச்சலில் உள்ளவர்கள் அறிவாலய கொத்தடிமைகள் மட்டுமே ....
தமிழகத்துக்கு அதிமுக தான் ப்பா
விஜய் அண்ணா முதல்வர் பதவி கேட்டதால் அவரை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே சுயநலத்தில் மூழ்கிக்கிடக்கும் சிறுபான்மை ஓட்டுக்களை பிரித்து விட்டால் திமுகவுக்கு ஜெயிக்கும் வாய்ப்பே இல்லை. சென்றமுறை கள்ளஓட்டு மூலம் ஜெயித்த தொகுதிகள் இந்த முறை அம்போ என்று போய்விடும்.
பொருள் கொள்வார் இல்லை. அப்போ கடையை ஏற கட்டு என்கிறார் பழனி கம்பெனி. முடிவுரையை எழுத போகும் தேர்தல். முன்னவர்கள் பயணித்த திசைய்யில் இல்லாமல் சுய நல தன்னிச்சை பயணம் ஊரு விளைவிக்கும் என்று பயண முடிவு தெரிவிக்கும். ஒவ்வொரு சுயநல அரசியல் வாதிகளும் கடைசியில் படு குழியில் வீழ்வர்.
அதுபற்றி உனக்கேன் கவலை?
வழக்கமாக உன்னுடைய சர்ச் பாதிரியார் கட்டளையிடும் திமுகவிற்கு நீயும் உன் குடும்பமும் ஓட்டு போடுங்கள்.மேலும்
-
காதல் மனைவி வெட்டிக் கொலை; சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்
-
நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவி வெட்டிக் கொலை: திருவெண்ணெய்நல்லுார் அருகே கணவர் கைது
-
தகராறை தடுத்த பெண் கொலை
-
போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
-
56 காஸ் சிலிண்டர்கள் சீர்காழி அருகே பறிமுதல்
-
ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்