குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
திருப்பூர்: 'குவாரிகள் வாயிலாக ஆளுங்கட்சியினர் லஞ்சம் வசூலிக்கின்றனர்' என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் வழங்கியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:காங்கயம் வட்டாரத்தில், சிவன்மலை, கீரனுார், மறவாபாளையம், கணபதிபாளையம், படியூர், நால்ரோடு, குட்டப்பாளையம்; திருப்பூர் தெற்கில் பெருந்தொழுவு, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம். பல்லடம் வட்டத்தில் பெருந்தொழுவு, கோடங்கிபாளையம், இச்சிப்படி, பூமலுார், வேலம்பாளையம், கக்காம்பாளையம். ஊத்துக்குளியில் சர்க்கார் கத்தாங்கண்ணி, மொரட்டுபாளையம். தாராபுத்தில் மணக்கடவு, கொழுமங்குளி. மடத்துக்குளத்தில் மைவாடி, துாங்காவி உட்பட பல வருவாய் கிராமங்களில் கல்குவாரி தொழில் நடக்கிறது.குவாரி நடத்துவோரிடம் லஞ்சம் வாங்குவதற்காக, ஆளுங்கட்சியினர், ஐகோர்ட் வழிகாட்டுதலை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிமங்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கின்றனர். இதனால், கிராம சாலைகள் பாதிக்கின்றன. அரசியல் கட்சியினரின் இத்தகைய செயலுக்கு அதிகாரிகளும், போலீசாரும் உடந்தையாக உள்ளனர். எனவே, உடந்தையாக உள்ள போலீசார், வட்டார போக்குவரத்து, வருவாய், கனிமம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
நீதிமன்ற சுய வழக்குகளில் தனிப்பெருமை பெற்றவை 'தினமலர்' செய்திகள்
-
பேனர் செய்தி/ 'யாரும் இல்லை!'
-
இந்திய வீரர்கள் கண்காணிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
தோனி சொல்றார்... சாம்சன் செய்றார்: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
ஏர் இந்தியா' நிர்வாகத்தின் அலட்சியத்தால் 8 மணிநேரம் வீணாக பறந்த பயணிகள்
-
அரையிறுதியில் இந்திய ஜோடி