2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல்
வாஷிங்டன் : மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்காவின், 'யு.எஸ்.எஸ்., திரிபோலி' என்ற பிரமாண்ட போர்க்கப்பல், 2,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சண்டையிட்டு வருகின்றன. உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும், 'ஹார்முஸ் ஜலசந்தி'யை ஈரான் மூடி உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் உட்பட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்., திரிபோலி, 2,000க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஜப்பானின் ஒகினாவாவை தளமாகக் கொண்ட, 31வது படைப்பிரிவு வீரர்கள் இக்கப்பலில் உள்ளனர். இவர்கள், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை உடனடியாக துவங்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள். கடந்த 15ல், சீன கடற்பகுதியில் காணப்பட்ட இக்கப்பல், விரைவில் அரபிக் கடலை அடையும் என, கூறப்படுகிறது. இக்கப்பலில் அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதுவரை வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா, தற்போது தரைப்படை வீரர்களை அனுப்புவது, போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் கார்க் தீவை கைப்பற்றக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து முட்டுக்கட்டையை தகர்த்து, உலகளாவிய எண்ணெய் வினியோகத்தை சீரமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
Universal ROUDIமேலும்
-
ஏறும்... ஆனா, ஏறாது! எச்சரிக்கை உணர்வில் முதலீட்டாளர்கள்
-
சந்தையை எதிர்கொள்வது எப்படி?
-
நான்கு ஆண்டுகளில் மோசமான ஒரு நாள் வீழ்ச்சி
-
ஏப்., 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம்
-
ஏவுகணை தயாரிக்கும் திறனை ஈரான் இழந்துவிட்டதால் போர் விரைவில் முடியும்!: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இதே நாளில் அன்று