சந்தையை எதிர்கொள்வது எப்படி?

இந்திய பங்குச் சந்தைகளில், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீண்டகால சரிவு நிலவி வருகிறது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், சந்தை கடும் அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு அதிகளவு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்தார். சந்தையின் தற்போதைய நிலை மற்றும் ரிஸ்க் குறித்து அவர் தெரிவித்ததாவது:


1. சந்தையின் தற்போதைய நிலை




Tamil News
* பி.எஸ்.இ., 1000 குறியீட்டில் 65% பங்குகள் 3 ஆண்டுகளாக நஷ்டத்தில் உள்ளன

* 50% பங்குகள் 5 ஆண்டுகள் லாபத்தையும் இழந்துள்ளன

* சில பெரிய பங்குகளின் உயர்வே சந்தையை தாங்குகிறது.


2. பொருளாதார அழுத்தங்கள்





* உலக அரசியல் பதற்றம், கச்சா எண்ணெய் உயர்வு தாக்கம்

* எண்ணெய் 10 டாலர் உயர்ந்தால் ஜி.டி.பி., வளர்ச்சி 0.5% குறையும்

* கச்சா எண்ணெய் 90 டாலருக்கு கீழே இருந்தால் அழுத்தம் குறையும்.


3. பாதுகாப்பான துறைகள்





* பார்மா, டெலிகாம். நீண்டகால போர், பார்மா துறையையும் பாதிக்கலாம்

* ஐ.டி., துறை பங்குகளின் மதிப்பீடுகள் 10 ஆண்டுகால சராசரியைவிட குறைவு

* அமெரிக்க டாலரின் வலிமை, நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு ஆதரவு.


4. செய்ய வேண்டியது என்ன





* அவசர முதலீட்டை தவிர்க்கவும்

* தெளிவு வரும் வரை அதிக முதலீடு வேண்டாம்

* அசெட் அலகேஷன் மிக முக்கியம்

* உயர்தர நிறுவனங்களில் மட்டும் முதலீடு

* ஊக அடிப்படையிலான சிறு பங்குகளை தவிர்க்கவும்.



தற்போதைய இந்த நிலை முழுமையான சரிவு நிலை அல்ல. சந்தை இன்னும் பல சவால்களை எதிர்கொள்ளக்கூடும். பொறுமை, ஒழுக்கம், மற்றும் சரியான இடர் மேலாண்மை ஆகியவை தான் முதலீட்டாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



“சந்தையில் லாபம் கிடைப்பது வேகத்தினால் அல்ல; பொறுமையினால் தான்”.

Advertisement