பணம், பரிசு பொருட்கள் பதுக்கலை கண்கா-ணிக்கணும்

ஈரோடு; ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் மினிஸ்தி, தேர்தல் செலவின பார்வையாளர்கள் அபிஷேக் கவு தம், ஹலக்கர் ராஜேஸ் நம்தேவ் கலந்து கொண்டனர்.


வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் வழங்-கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண் டும். கடந்த தேர்தல்களில் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபர்கள் மற்றும் இடங்களை கண்-காணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரை, ஆலோசனை வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்-பித்ஜெயின், மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்துஜா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், கார்த்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement