'போக்சோ' வழக்கில் தேடப்பட்டவர் 8 ஆண்டுக்கு பின் புதுச்சேரியில் கைது

சேலம்; விழுப்புரம் மாவட்டம் அசுரத்தை சேர்ந்த, கூலித்-தொழிலாளி சிவா, 45. இவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், சேலம், சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 2017ல், 'போக்சோ' வழக்கு பதிவானது. தொடர்ந்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், சேலம் நீதி-மன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. சிவாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தேர்தல் நேரம் என்பதால் தலை
மறைவு குற்றவாளிகளை பிடிக்க, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, தனிப்-படை அமைத்து

உத்தர விட்டார்.

அவர்கள் விசாரணையில், சிவா புதுச்சேரியில் தங்கி கூலி வேலை பார்ப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், 8 ஆண்டுக்கு பின் சிவாவை பிடித்து கைது செய்து, நேற்று சேலம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.ரவுடிக்கு 'காப்பு'
சேலம், தாதகாப்பட்டி சண்முகா நகர், மதுரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி தாமோதரன், 26. இவரை, 2023ல் வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர், வழக்கு விசார-ணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அன்ன-தானப்பட்டியில் இருந்தார். அவரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அதேபோல் கிச்சிப்
பாளையம், எஸ்.எம்.சி., காலனி அந்தேரி-தோப்பை சேர்ந்தவர் மணிகண்டன், 32. இவர், 2020ல் வழிப்பறி வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நி-லையில், கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று அதே பகுதியில் இருந்த அவரை பிடித்து கைது செய்தனர்.

Advertisement