பூசாரியை கட்டிப்போட்டு சங்கிலி பறித்த 2 பேர் சுற்றிவளைப்பு

தாரமங்கலம்; தாரமங்கலம் அருகே பெரியேரிப்பட்டியை சேர்ந்-தவர் சின்னப்பன், 55. அதே பகுதியில் உள்ள அங்-காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இவரை கடந்த, 16 இரவு, துட்டம்பட்டி அருகே மயானத்-துக்கு அழைத்துச்சென்ற கும்பல், கை, கால்களை கட்டிப்போட்டு தாக்கி, 12 கிராம் தங்க சங்கிலி, 350 கிராம் வெள்ளி தண்டையை பறித்துச்சென்றனர். சின்னப்பன் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, திருநெல்வேலியை சேர்ந்த மாசான முத்து, 25, சிஜூன், 29, ஆகியோரை, நேற்று கைது செய்து, தண்டையை மீட்டனர்.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பவளத்-தானுார் ரவுண்டானாவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மொபட்டில் இருவர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசினர். சந்தேகத்தில் இருவ-ரையும் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்-ததில் பூசாரியிடம் சங்கிலி பறித்ததை ஒப்புக்-கொண்டனர். இருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடுகிறோம்' என்றனர்.

Advertisement