எக்ஸல் கல்வி நிறுவனத்தில் 'எக்ஸலன்டா - 26' கலை விழா

குமாரபாளையம்; குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனம் சார்பில், 'எக்ஸலன்டா - 26' கலை விழா இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. நிறுவன அறங்கா-வலர் பார்வதி, எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி குத்துவிளக்கேற்றினர்.


எக்ஸல் கல்வி நிறுவன துணைத்தலைவர் மதன்கார்த்திக், அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், எக்ஸல் பொறியியல் கல்லுாரி முதல்வர் பொம்-மண்ண ராஜா, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர், எக்ஸல் பாலி-டெக்னிக் முதல்வர், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஆகியோர் தங்களது கல்லுாரிகளின் ஆண்டறிக்கையை வாசித்தனர்.பின், கல்லுாரிக்கு பெருமை சேர்த்த பேராசிரி-யர்கள், மாணவர்களுக்கு, விருதுகளை எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகரும், இசை-யமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், நடிகை மிர்னா, பாடகி ஸ்ரீனிஷா ஜெயசீலன், நடிகர் ஜீவா, நடிகை சித்திக் இத்னானி, பாடகர் ஷாம் விஷால், 'விஜே' கல்யாணி பங்கேற்றனர்.

Advertisement