காதலியுடன் தங்கி இருந்தவர் தற்கொலை

சோமங்கலம்: காதலியுடன் தங்கி இருந்த அசாம் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம் அடுத்த சோமங்கலம், காட்டரம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பிரிஸ்ஷா, 26 என்ற அசாம் வாலிபர், தன் 22 வயது காதலியுடன் தங்கி இருந்தார். இருங்காட்டுக்கோட்டை, சிப்காடில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பிரிஸ்ஷா பணியாற்றி வந்தார்.

நேற்று காலை வீட்டின் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில், பிரிஸ்ஷா இறந்து கிடந்தார்.

இதை பார்த்த அவரது காதலி அலறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement