ஹோலி ஏஞ்சல் பள்ளி ஆண்டு விழா

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 8ம் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஏரோமிஸ் பிஸ்காட் வரவேற்றார். பள்ளி இயக்குநர் அகிலா ஆண்டறிக்கை வாசித்தார். சேர்மன் பழனியப்பன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர் அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் பேசினார். ஹோலி ஏஞ்சல் அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் கீர்த்திவாசன், விழுப்புரம் சரஸ்வதி பள்ளி நிர்வாகி ராஜசேகர், பணமலைப்பேட்டை கிருஷ்ணா பள்ளி தாளாளர் சேகர், தங்கம் பள்ளி சேர்மன் சீனு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு, பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Advertisement