துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு 

வானுார்: ஆரோவில் போலீசார் மற்றும் துணை ரானுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது.

சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று குயிலாப்பாளையம் கிராமத்தில் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் ஆரோவில் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.

கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் நடந்த அணிவகுப்பு பதற்றமான பகுதியாக கருத்தப்பட்ட குயிலாப்பாளையம் முக்கிய வீதிகளில் சென்று நிறைவடைந்தது.

ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement