'கிரிப்டோ கரன்சி' முதலீடு: ரூ.30 கோடி சுருட்டிய மோசடி நிறுவனம் மீது வழக்கு

1

சென்னை: 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்யும் தொகைக்கு, மாதந்தோறும், 15 - 20 சதவீதம் வரை வட்டி தருவதாக, 30 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் ஒரு வணிக வளாகத்தில், 'டி.எப்.டி., பிளாக் செயின் சர்வீஸ்' என்ற நிறுவனம், 'டைகான் பின்டெக்' என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், கிண்டி தொழிற்பேட்டை வளாகம், கிழக்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனம், 'கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், மாதந்தோறும், 15 - 20 சதவீதம் வரை வட்டி தரப்படும்' என, விளம்பரம் செய்தது. அதை நம்பி முதலீடு செய்தோரிடம் இருந்து 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து, சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., லட்சுமிபிரியா தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

டி.எப்.டி., பிளாக் செயின் சர்வீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள், இனியும் புகார் அளிக்காமல் இருந்தால், சென்னை அசோக் நகரில் உள்ள, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் அளிக்கலாம்.

அதுபற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால், 044 - 2250 4332 மற்றும் 95000 77343 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement