தீயணைப்பு துறையில் போலி சான்று விவகாரம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில், 2025 நவ., 17ம் தேதி இரவு, 2.50 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து, அவரை லஞ்ச வழக்கில் சிக்க வைத்த விவகாரத்தில், பெருமாள்புரம் போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய , திருப்பூர் தீயணைப்பு அதிகாரி வீரராஜ், ஜாமின் கிடைக்காமல் தலைமறைவாக உள்ளார்.
வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.
நீதிபதி புகழேந்தி விசாரித்தார். விசாரணையின் போது, தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு, கன்னியாகுமரியில் பணியாற்றிய காலத்தில், சென்னை ராஜ்பவன் தீயணைப்பு வீரர் சுந்தரராஜன் போலி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து, அவரை இந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, 2019 - 2020 காலகட்டத்தில் கன்னியாகுமரியில் வழங்கப்பட்ட இரண்டு போலி சான்றிதழ்கள் உட்பட, தமிழகம் முழுதும் தீயணைப்பு துறை உயரதிகாரிகள் வழங்கிய போலி சான்றிதழ்கள் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலும்
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
-
பரமக்குடி கேதார கவுரீஸ்வரி கோயில் பூச்சொரிதல் விழா