கத்தியால் வெட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

சென்னை: சென்னை காசிமேடு, துரை தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரசுதன், 47. கப்பலில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று, காசிமேடு, பவர்குப்பம் சுரங்கப்பாதை அருகே உள்ள மீன் செட்டில், அவரது மைத்துனர் திவாகர், நண்பர் சரவணன் ஆகியோரிடம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த காசிமேடு, சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த தேசிங்கு, 32, என்பவர், சரவணனிடம் பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்தார். ஹரிகரசுதனும், திவாகரும் தடுத்தபோது, தேசிங்கு தகாத வார்த்தைகளால் பேசி, ஹரிகரசுதனை கத்தியால் வெட்டினார்.

படுகாயமடைந்த ஹரிகரசுதன், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் தேசிங்கை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

இவர் மீது, கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 12 குற்ற வழக்குகள் உள்ளது.

Advertisement