கனரக வாகன 'ஷெட்'டில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடகாலில் கோபி, 40, என்பவருக்கு சொந்தமான கனரா வாகனங்கள் பழுது பார்க்கும் 'ஷெட்' உள்ளது.

நேற்று மாலை, ஷெட் அருகே உள்ள பழைய பொருட்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழைய வேன் மீதும் தீ பற்றியதை கண்ட பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.

தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத்துறை வீரர்கள், 2 மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை அணைத்தனர். இதில், வேன் தீயில் எரிந்து நாசமானது. ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement