கோரிக்கைகளை ஏற்றால் ஆதரவு

நாமக்கல்; நாமக்கல்லில், விவசாய முன்னேற்ற கழகம், பி.ஏ.சி.எல்., முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணி-யாளர்கள் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது.


வி.மு.க., பொதுச்செயலாளர் பாலசுப்பரம-ணியன், பி.ஏ.சி.எல்., பணி மீட்பு போராட்டக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.மு.க., தலைவர் செல்ல ராசா-மணி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஐந்தாண்டுகளாக நடந்து வரும், தி.மு.க., ஆட்சியில், விவசாயிகளின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி-களை, குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அதனால், விவசாய முன்னேற்ற கழக பொதுச்-செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அ.தி.மு.க., பொதுச்செய-லாளர் இ.பி.எஸ்.,ஐ நேரில் சந்தித்து, எங்களின் கோரிக்கைகளை அளிக்க உள்ளோம். அதை அவர் ஏற்று, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அதற்-கான தீர்வை அறிவித்தால், நடக்க உள்ள சட்ட-சபை தேர்தலில், விவசாயிகளும், ஒரு கோடி பேர் கொண்ட பி.ஏ.சி.எல்., முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் குடும்பத்தினரும், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டுப்போட முடிவு செய்துள்ளோம். ஏற்கா-விட்டால், சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் அல்லது நோட்டாவிற்கு ஓட்டுபோடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்

Advertisement