தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை
சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார், மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேர்தல் பார்வையாளர்கள் (பொது) கஞ்சன் வெர்மா, (செலவினம்) மோகன்லால், கிருஷ்ணகுமார் பிரசாத் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 1518 ஓட்டுச்சாவடி மையங்களில் 101 பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு, தேர்தல் நடத்தை விதி கண்காணிப்பு பணிகள், தேர்தல் சார்ந்த பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தபால் ஓட்டுக்களுக்காக வழங்கப்பட்டுள்ள படிவங்கள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) விஜயகுமார், (தேர்தல்) ஸ்ரீதர் பங்கேற்றனர்.
மேலும்
-
காதல் மனைவி வெட்டிக் கொலை; சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்
-
நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவி வெட்டிக் கொலை: திருவெண்ணெய்நல்லுார் அருகே கணவர் கைது
-
தகராறை தடுத்த பெண் கொலை
-
போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
-
56 காஸ் சிலிண்டர்கள் சீர்காழி அருகே பறிமுதல்
-
ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்