மா.கம்யூ., கட்சி செயற்குழு கூட்டம் முதல் புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 21)!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 21) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
@1brஅது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* மா.கம்யூ., கட்சியின் செயற்குழு கூட்டம் 23ம் தேதி நடக்க இருந்த நிலையில், சூழலின் அவசியம் கருதி இன்று அவசரமாக கூடியது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் நீடித்து வரும் இழுபறி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
* தவெக சார்பில் போட்டியிடுவோருக்கான 2ம் கட்ட நேர்காணல் நடந்தது. மேலும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துள்ளதாக தகவல்; புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்கிறார்.
* தொகுதி பங்கீடு தொடர்பாக டில்லியில் இன்று (மார்ச் 21) காலை அமித்ஷாவை தேஜ கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திக்கிறார். இன்று காலை 11.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
* அதிமுக-பாஜ தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க இன்று மதியம் 12 மணிக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பியூஷ் கோயல் தமிழகம் வருகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜ - அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
* ரம்ஜான் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து (2)
பேசும் தமிழன் - ,
21 மார்,2026 - 12:30 Report Abuse
எல்லாம் சரி .... விசிலடிச்சான் குஞ்சுகள் வாங்கி சென்ற விண்ணப்ப படிவங்களில் எத்தனை திரும்ப வந்தன என்ற எண்ணிக்கையை கொஞ்சம் சொன்னால் ....எங்களுக்கு கழுவி.... கழுவி... ஊற்ற வசதியாக இருக்கும். 0
0
Reply
சந்திரன் - ,
21 மார்,2026 - 08:27 Report Abuse
திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்ற ஆதரவு தர வேண்டும் 0
0
Reply
மேலும்
-
காதல் மனைவி வெட்டிக் கொலை; சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்
-
நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவி வெட்டிக் கொலை: திருவெண்ணெய்நல்லுார் அருகே கணவர் கைது
-
தகராறை தடுத்த பெண் கொலை
-
போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
-
56 காஸ் சிலிண்டர்கள் சீர்காழி அருகே பறிமுதல்
-
ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
Advertisement
Advertisement