விளம்பர பதாகை அகற்றப்படாத பயணியர் நிழற்குடைகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் முதல்வர், அமைச்சர் புகைப்படம் கொண்ட விளம்பர பதாகை அகற்றப்படாமல் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பறக்கும் படையினர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிச்சேரி, பருக்கைக்குடி, புளியங்குடி, மேலச்சாக்குளம் விலக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டோ கொண்ட விளம்பர பதாகை தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது.

இதனால் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தும் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் விளம்பர பதாகை அகற்றப்படாத சூழ்நிலையால் சம்பந்தப்பட்ட பறக்கும் படையினர் ஆய்வு செய்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளம்பர பதாகை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement