அனுமதிக்க மாட்டோம்!

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம் மக்களின் ஓட்டுரிமையை பறிக்க, மத்திய பா.ஜ., அரசு முயல்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர்களின் ஓட்டுரிமையை பறிக்க, நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுவோம்.

மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., கட்சி

தலைமை வேண்டும்!



மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர், மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் நாம் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். அதற்கு, நம் நாடு தலைமை தாங்க வேண்டும்; நம்முடன் இணைய பல நாடுகள் தயாராக உள்ளன.

சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

வலுவான அணி!



சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பயனுள்ள வகையில் தலையிட முடியாமல் போனதற்கு, வலுவான தலைவர்கள் இல்லாததே காரணம். எனவே, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வலுவான அணியை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

சுரேஷ் கோபி மத்தி ய இணை அமை ச்சர், பா.ஜ.,

Advertisement