பா.ஜ.,வின் 'பி டீம்' தான் காங்கிரஸ் கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: ''காங்கிரசும், ராகுலும் தான் பா.ஜ.,வின், 'பி டீம்' ஆக உண்மையில் செயல்படுகின்றனர்,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
பலத்த போட்டி இந்த தேர்தலில் ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்த பேட்டி:
தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல; விசித்திரமான பிறவி. புரிந்து கொள்ளும் திறனும் அவர்களுக்கு இருக்காது. அந்த வகையைச் சேர்ந்தவர் தான் ராகுல். தேர்தலில் பல முறை தோற்றும் கூட, அதிலிருந்து பாடம் கற்காமல் ஆணவமாக செயல்படுகிறார். இந்த முறையும் கேரள சட்டசபை தேர்தலில் காங்., தோற்பது உறுதி.
தேசிய அளவில் அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கினால், ராகுல் தலைமையில் இயங்கும் காங்கிரசே உண்மையில் பா.ஜ.,வின், பி டீம் ஆக செயல்படுவதை காண முடியும். ஓட்டுக்காக பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதவாத அமைப்புகளுடன், காங்., சமரசம் செய்கிறது. ஆனால், நாங்கள் எந்தவொரு மதவாத சக்தியுடனும் சமரசம் செய்ததில்லை; செய்யவும் மாட்டோம்.
சபரிமலையில் தங்கம் காணாமல் போன விவகாரம், கேரள உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ளது. விசாரணையில் எந்த தவறும் காணப்படவில்லை.
மறுசீரமைப்பு பணி தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடவே காங்., இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
கேரளாவுக்கு நிதி உதவி வழங்குவதில், குறிப்பாக, வயநாடு மறுசீரமைப்பு பணிகளில் மத்திய அரசு விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது.
மத்திய அரசு கேரளாவுக்கு நிறைய உதவி செய்துள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பது அர்த்தமற்றது; தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு 'கிங்' பழனிசாமி
-
சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?
-
எங்களை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நா.த.க., சீமான் ஆவேசம்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!