'டார்ச் லைட்'டில் போட்டியா? கமலின் குழப்பமான விளக்கம்

21


சென்னை: 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தன் வழக்கமான பாணியிலேயே, கட்சியினரிடம் விளக்கம் அளித்துள்ளார்.


தி.மு.க., கூட்டணியில், இடம் பெற்றுள்ள ம.நீ.ம., கட்சி, இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி விட்டதால், இரண்டு தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், தி.மு.க., திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.


இதையடுத்து, 'கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும்; எங்கள் கட்சியின் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்' என்று, ம.நீ.ம., வலியுறுத்துகிறது. இந்த நிலையில், ம.நீ.ம., நிர்வாகிகள் கூட்டம், சென்னையில், கமல் தலைமையில் நடந்தது.


அதில், பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டாம்,' என, வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் கமல் பேசுகையில், 'டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டி என்ற நம்பிக்கை, எனக்கு இருப்பது போல் உங்களுக்கும் இருக்கும் என, நாம் நம்புகிறேன்' என தன் வழக்கமான பாணியிலேயே பதில் தெரிவித்துள்ளார்.

Advertisement