ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் 

கடலுார்: கடலுாரில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடலுார் மாநகர பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கடலுார், செம்மண்டலம் அஞ்சுமனே நுாரே முஹம்மதியா பள்ளி வாசலின் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இதில், ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலுார் வடக்கு மாவட்டம் சார்பில் கடலுார் டவுன்ஹாலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதே போன்று, கடலுார் முதுநகர் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளி வாசல் உட்பட பல்வேறு இடங்களில் தொழுகை நடந்தது.

Advertisement