வழிப்பறி, கஞ்சா, மது விற்ற வழக்கு 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

சேலம்:சேலம், பெரியபுதுாரை சேர்ந்தவர் தியாகராஜன், 22. இவர் கடந்த பிப்., 25ல், கான்வென்ட் சாலையில் கஞ்சா விற்றபோது, அழகாபுரம் போலீசார் கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே, 2024ல் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல் தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்தவர் நாகராஜ், 26. இவர் கடந்த பிப்., 24ல் மூணாங்கரடு தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்றதால், அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே, 2023ல் கஞ்சா விற்ற வழக்கில் கைதானார்.


சேலம், பச்சப்பட்டி பிரதான சாலையை சேர்ந்த காமராஜ், 40, கடந்த பிப்., 26ல் லவ் - ஓ காலனி மேம்பால பகுதியில், கள்ளத்-தனமாக மது பாட்டிலில், 'ஊமத்தை சாறு' கலந்து விற்றார். அவரை, டவுன் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த பிரதாப், 31, கடந்த பிப்., 22ல் குகையில், ஜெகநாதன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி, 3,500 ரூபாயை பறித்து சென்றதால், டவுன் போலீசார் கைது செய்தனர். இவர், 2022, 2023ம் ஆண்டு-களில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த, 4 பேரும், தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement