திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் முதல் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனல் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 22)!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 22) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக இன்று (மார்ச் 22)
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களை சந்தித்தார். அவர் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
* திமுகவில் இன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு
விருப்பமனு அளித்தோரிடம் நேர்காணல் நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களுக்கு மாலையில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
* சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களை ஒன்றிணைக்கும் 'ரோர் 26'(ROAR 26) என்ற பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நடத்துகிறது; இந்த விழா மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
* தமிழக பா.ஜ., மூத்த தலைவரும் நடிகருமான சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு, பொறுப்பு இருந்தால் தான் செயல்பட முடியும். ஆதரவாளர்கள் மட்டுமல்ல நானும் ஆதங்கத்தில் தான் இருக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.
* பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை(மார்ச்.23) கொடியேற்றம் நடைபெறவுள்ளது; இந்நிலையில் இன்று மாலை முதல் ஏப்ரல்.1 வரை நடை திறப்பு.
இன்றைய போட்டி
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்- பைனல்
இடம்: ஆர்லியன்ஸ், பிரான்ஸ்
நேரம்: மதியம்-3.30 மணி
பிரிமியர் லீக் கால்பந்து
அணிகள்- டாட்டன்ஹாம்-நாட்டிங்காம்
இடம்: லண்டன், இங்கிலாந்து
நேரம்; இரவு 7;45 மணி
இந்தக் கட்சியை வெளியேற்றியது திமுக செய்த சரியான செயல் ..... பாராட்டவேண்டும் ......
நாட்டுக்கு பெரும் இழப்பு.
வெந்தவாய் வேல்முருகன் வாழுரிமையே கவலைகிடமாக இருக்கிறதே?
தமிழகத்தில் அழிந்து ஒழிந்து போகவேண்டிய பல கட்சிகளில் இந்த டோல்கேட் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஒன்று. அக்கட்சிதான் முதன்முதலாக அழிந்து போவதற்கு பிள்ளையார் சுழி போட்டு கணக்கை துவங்கி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அழிய வேண்டிய இடத்தில் இருப்பது தமிழ், தமிழன் என்று கட்டைக் குரலில் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தேசவிரோதியான சைமன் செபஸ்டியான் என்கிற சீமானின் நாம் தமிழர் என்ற கட்சியாகும். அநேகமாக நடக்கப் போகும் சட்டமன்ற தேர்தலோடு அக்கட்சிக்கு தமிழக மக்கள் பாடைகட்டி விடுவார்கள். அடுத்ததாக அழிய வேண்டிய லிஸ்டில் வருவது பேராசை பிடித்த பிரேமலதாவின் கட்சியான தேமுதிக இந்த தேர்தலோடு அந்தக் கட்சிக்கு பால் ஊற்றி காரியம் செய்ய தமிழக
மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்து வரிசையில் வருவது உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்டுகள் அந்தக் கட்சியும் இந்த தேர்தலோடு காலாவதியாகி பரணில் போட்டுள்ள உண்டியலை தூசிதட்டி எடுத்து பழையபடி வீதிக்கு பிச்சை எடுக்க வந்து விடுவார்கள். கடைசியாக சிறுபான்மையினரின் காவலனாக அவதாரம் எடுத்துள்ள போலி மதச்சார்பின்மையின் புதிய போராளி கூத்தாடி ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவனும் வருகின்ற தேர்தலில் தோற்றுப்போய் சினிமாவிலும் நடிக்க முடியாமல் Field Out ஆகி கடைசியில் கட்சியையும் கலைத்து விட்டு தலையில் முக்காடு போட்டு போக தயாராக இருப்பவர். அடுத்தடுத்து தேர்தல் முடிந்ததும் கமல், வைகோ, கிருஷ்ணசாமி, கொங்கு நாடு ஈஸ்வரன், போன்றவர்களின் கட்சிகள் தானாக அழிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்போ இரண்டு கழகங்களும் அழிய வேண்டாமா?
தவாகட்சி என்று ஒரு கட்சி இருக்கிறதா இந்த சந்தேகம் தான்.. தினமும் பேட்டி அறிக்கை வெளியிட்டால்தானே மக்கள் மத்தியில் இருப்பது தெரியும் இதையே செய்யாத வேல்முருகன் நிலைபாட்டை அறிவித்து என்ன செய்யப் போகிறார்மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்