'இடைத்தரகர் கட்டுப்பாட்டில் பத்ரகாளியம்மன் கோவில்'
மேட்டூர்:மேச்சேரி
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மாதந்தோறும் அமா-வாசை நாளில் பல்வேறு
மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து
செல்கின்றனர்.
அதன்படி கடந்த, 18ல் அமாவாசை முடிந்த நிலையில்,
அன்றிரவு கோவிலில் இருந்த அன்னதான உண்டியலை மர்ம நபர்கள்
உடைத்து பணத்தை எடுத்து சென்றனர். செயல் அலுவலர் சுதா நேற்று முன்தினம்
அளித்த புகார்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று
திருத்-தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், பத்ரகாளியம்மன்
கோவில் பதிவேடு, உண்டியல் திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள 'சிசிடிவி'கேமராக்களை பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் எருமைக்கிடா
வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்த கிடாவை விற்பதன் மூலம்
கிடைக்கும் பணத்தை அறநிலையத்துறை வங்கி கணக்கில் செலுத்த
வேண்டும்.
ஆனால் இக்கோவிலில் மட்டும் இடைத்தரகர்கள், 4 பேர் கூட்டாக
தொடங்கியுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது
அதிர்ச்-சியளிக்கிறது. மேலும் கோவிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்,
முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மார்ச் 30 ல் த.வெ.க. - நாம் தமிழர் 6ல் அ.தி.மு.க. மனு தாக்கல்
-
இந்திய கம்யூ. வேட்பாளர் 3வது முறையாக போட்டி இந்த முறை வெல்வாரா?
-
களத்தில் நான்கு பெண்கள் கவனம் பெறும் தாராபுரம்
-
விவசாயிகள் ஓட்டு யாருக்கு?
-
வடகோவையில் தண்டவாள பணி: போத்தனுார் வழியாக ரயில்கள் இயக்கம்
-
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி