ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

நாமக்கல்: ரம்ஜான் பண்டிகையையொட்டி, நாமக்கல் அஞ்சுமனே இஸ்-லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், நாமக்கல் பேட்டை பள்ளி-வாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் திர-ளான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர்.


அங்கு ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா, சிறப்பு தொழுகையை நடத்தினார்.இதில், 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்-தினர். தொழுகை முடிந்தபின், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சிறுவர்கள் உள்-ளிட்ட பலரும் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் வாழ்த்துக்-களை பரிமாறி கொண்டனர்.

இதேபோல், நாமக்கல் திப்பு சுல்தான் மஸ்ஜித் (கோட்டை பள்ளிவாசல்), திருச்சி சாலை மாருதி நகர், மஸ்ஜித் இ நுாருல் இமான் பள்ளிவாசல், நாமக்கல், மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி., பிட்னஸ் ஜிம் திடல், திருச்சி சாலை, ஜி.எம்.கே., நகர் திடல் உள்ளிட்ட பல்-வேறு இடங்களில், நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

மோகனுார், ப.வேலுார், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

Advertisement