வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் முன் விசாரணை 645 பேர் மீது குற்ற வழக்கு

1

சென்னை: வீட்டு வேலைக்கு அமர்த்த இருந்த 40,812 பேரில், 645 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால், மறு விசாரணை நடக்கிறது.

வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆட்களை நியமனம் செய்யும் முன், அவர்கள் குற்றப்பின்னணி உடையவர்களா என்பதை அறிய, தமிழக காவல் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

'ஆன்லைன்' வாயிலாக 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து, உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்வர்.

அதன்பின், குற்றப்பின்னணி உள்ள நபர்கள் குறித்து, 'இ - மெயில்' வாயிலாக தெரிவிக்கப்படும். அந்த வகையில், நடப்பாண்டு ஜனவரியில் 40,812 பேர் குறித்து, உளவுத்துறை போலீசார் விசாரணை செய்ததில், 645 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் 20,810 பேர் குறித்து விசாரணை செய்ததில், 422 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், அதேபோல, நவம்பரில் விண்ணப்பித்த 47,211 பேர் குறித்து விசாரணை செய்ததில், 568 பேர் குற்ற வழக்குகளில் சிக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாநிலம் முழுதும் கடந்த ஆண்டு நவம்பரில், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த 75,026 பேர் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை செய்ததில், 470 பேர் மீதும் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisement