கஞ்சா விற்ற 2 பேர் கைது

ப.வேலுார்:ப.வேலுார் பகுதிகளில் சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிக-ரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் எஸ்.ஐ., தங்கராசு, சாந்-தகுமார் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்ப-னையை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது, பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி பின்புறம், தென்னந்-தோப்பில் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசாரை கண்-டது, மர்ம நபர்கள் தப்பி ஓடியபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்கரா நாயக் மகன் சம்பத்குமார், 19, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்சாபு மகன் திபு சாபு, 21, இருவரையும் போலீசார் கைது செய்து, 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement