ரூ.82.15 லட்சம் நேற்றுவரை பறிமுதல்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் கடந்த, 16 முதல் நேற்று முன்தினம் வரை, 76 லட்சத்து, 56,570 ரூபாய் பறிமுதல் செய்தனர்.


பல்வேறு இடங்களில், 5.58 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுவரை, 82 லட்சத்து, 15,070 ரூபாய் பறி-முதல் செய்தனர். இதில், 66 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்-களின் அடிப்படையில் திரும்ப ஒப்படைத்தனர். மாவட்ட அளவில், ஒரு லட்சத்து, 62,530 ரூபாய் மதிப்பிலான மதுபானங்-களை பறிமுதல் செய்து, 79 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Advertisement