லாரியில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் சிக்கினர்

அரூர்: அரூரிலுள்ள, சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அ.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்-தினம் காலை, 6:00 மணிக்கு மேற்கு மண்டல மத்-திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு ஆனந்தகுமார் மற்றும் போலீசார் மதுவிலக்கு மற்றும் போதைப்-பொருட்கள் கடத்தல் சம்மந்தமாக ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்-படும்படி நின்றிருந்த லாரி ஓட்டுனரிடம் விசா-ரித்தனர்.

அவர், திருநெல்வேலி மாவட்டம், கட்டபுள்ளி கோவில் தெருவை சேர்ந்த சுடலை, 25, என்பதும், அவருடன், திருநெல்வேலி டவுன் முப்பிடாதி-யம்மன் கோவில் தெரு மாடசாமி, 24, திருநெல்-வேலி சங்கர் நகர் கருப்பசாமி, 21, ஆகியோர் இருந்தனர். மூவரும் ஓடிசாவில் இருந்து, 3 கிலோ கஞ்சா வாங்கி வந்து, ஊரில் விற்க லாரியின் கேபின் மேல் தார்ப்பாயில் கொண்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஏட்டு ஆனந்தகுமார் புகார் படி, அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், சுடலை, மாடசாமி, கருப்பசாமி ஆகி-யோரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement