தமிழ்ப்புதல்வன் திட்டம் உயர்கல்விக்கு ஊன்றுகோல்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது தமிழ்ப்புதல்வன் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல லட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது தமிழ்ப்புதல்வன்.
இவர்களின் கல்வி தொடர, எளிய குடும்பங்களின் அடுத்த தலைமுறைகள் செழிக்க திமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டும். திராவிட மாடல் ஒன்றாக வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்ப்புதல்வன் திட்டம்
தமிழ்ப்புதல்வன் திட்டம் என்பது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி படிக்க, கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும். புதுமைப்பெண் திட்டத்தைப் போன்று, மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்து உயர்கல்வியை ஊக்குவிக்க இத்திட்டம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இவர் அறிவித்த இம்மாதிரி திட்டங்களை யாராவது வரிசையாக சொல்லுங்க பார்ப்போம் இது அவருக்கே தெரியாது... உருப்படாது தமிழ்நாடு
திராவிட மாடல் திருடர்கள் மாடல். திமுகவை ஒழிப்போம்.
உங்கள் தமிழ்ப்புதல்வன் உதயநிதி போதுமே ஒரே ஒரு செங்கல் 40 பார்லிமென்ட் தொகுதி WASHOUT செய்தவர் ஆயிற்றே, ஆகவே தவப்புதல்வன் திட்டம் அருமை தான் , என்ன எடப்பாடி பயன் TENDER இல் பிஸி
டாஸ்மாக் உச்சக்கட்ட வியாபாரம் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியது நீட் தேர்வை ரத்து பண்ணாமல் ஏமாற்றியது இது யாருக்கான ஊன்றுகோல்.
இங்க பாரு, தெலுங்கு புதல்வன் தமில் புதல்வனை உருவாக்குகிறாராம் .
எல்லா திட்டமும் உங்கள் கொள்ளைக்கான திட்டம் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. மே மாதம் 5 நாள் உங்களால் கொள்ளைகளுக்கு புற்று புள்ளி வைக்கப்படும். அதுவரை உங்க தூக்கமின்மை தொடரும். கவலை வேண்டாம்.
உருட்டு உருட்டி தமிழ் நாட்டை போதை மற்றும் பாலியல் வன்முறை மாநிலமாக மாற்றி ஆகி விட்டது. உம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழு நிலைக்கு கொண்டு வந்து விட்டீர்.
நைனா உன்னோட காமெடிகளை கேட்டு ஊப்பீஸ்ங்களே சிரிக்குறானுங்க
தமிழில் எழுதி குடுத்த துண்டுசீட்டையே தமிழ்ப்புதல்வன்னு கூவுவது
வார துவக்க நாளிலேயே உருட்டல், பீற்றல் என அக்கப்போர் ஆரம்பிச்சாச்சா?