பாலியல் தொந்தரவு: குழந்தை பலி; தி.மு.க., நிர்வாகிக்கு 'குண்டாஸ்'

அஞ்செட்டி: அஞ்செட்டியை சேர்ந்த, 24 வயது இளம்-பெண்ணும், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்-பென்னாத்துாரை சேர்ந்த, 28 வாலிபரும், காத-லித்து திருமணம் செய்தனர். இவர்களது, இரண்-டரை வயது பெண் குழந்தை, கடந்த டிச., 11ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில், குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் குழந்தை உயிரிழந்தது தெரிந்தது.

விசாரணையில், அஞ்செட்டி அருகே, கோம்மை-காடு பகுதியை சேர்ந்த, தி.மு.க., இளைஞரணி கிளை செயலாளர் பெரியநாயகம், 40, என்பவர், குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரையும், குற்றத்தை வெளியில் கூறாமல் மறைத்த குழந்தையின் தாயையும் போக்சோவில், அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதான பெரி-யநாயகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்க துரை பரிந்துரை படி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

Advertisement