ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
சென்னை: மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 'ஈரானும், ஊரானும் வாழட்டும்' என நடிகர் கமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார்.
என்ன செய்கிறார்?
முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை.
அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது. நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்?
மனித நேயம்
என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள். நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள்.
பாமரர்களும், பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது. ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம்.
நீடூழி வாழட்டும்
அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு.
அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது. கிலாபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.
அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும். அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
வாழ்க இந்தியா
உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், பாஸ்பேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான். ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது.
'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.'(விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்) அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது.. நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
ஒரு அறிவு ஜீவி, படத்துறை மேதாவி...நிழலுக்கு கூட பள்ளிக்கூடம் போகாதவனெல்லாம் அரசியலுக்கு வந்தால் இதுதான் நிலைமை
கமாலு உசைனு இப்படித்தான் குருடாயில் மாதிரி வழுவழுன்னு ஒளருவான் அதுசரித்தான், இவனுக்கெதற்கப்பா தினமும் அரைப்பக்கம் ஒதுக்கி விளம்பரம் செய்கிறாய்? ஏதாவது மங்கம்மா அங்கம்மா சபதமா?
வென்டைய்யக்காயும் சேப்பங்கிழங்க்கும் வாழட்டும் இதையும் கமால் சேர்த்துக்கலாம்.
இவன் வாய் முழுவதும் விஷம் ஒரு சார்பாகவே கக்குவான் இவனிடம் தயவு செய்து மைக்கை காட்டாதீர்கள்
நீங்க ஒரு அறிவு சீவி ன்னு பலர் புகழ்ந்ததால அதை நெசம்ன்னு நம்பிட்டாரு .... Narcissism at its peak ..... அதே போல நம்பிய மாநில கெவுனரை மாத்த வெச்சுட்டாரு ......
அதேபோல தன்னை அறிவு சீவி ன்னு நம்பியவர் மாநில கெவுனரை மாத்த வெச்சுட்டாரு ......
திரையில் ஹீரோ அரசியலிலும் ஹீரோவாக இருப்பார் என்று நினைத்து அவர்களை பெரிய ஆளாக்குவது அறியாமை .... இருள் ........
வழக்கம் போல சரியான உளறல். போர் வந்தால் கஷ்டப்பட போகும் சாமானியன் மீதும் நடுத்தர வர்க்கத்தினரின் மீதும் என்ன ஒரு கரிசனை. இந்த கரிசனை ஒவ்வொரு படத்தின் போதும் கருப்பு பணம் வாஙகி வரி ஏய்ப்பு செய்யும் போது எங்கே போகிறது? 500 ஆண்டுகள் அடிமை படுத்திய , கொள்ளை அடித்து சென்ற திருட்டு முகலாய வாரிசு நீங்கள் அந்த அடிமை புத்தி இன்னும் மாறவில்லை உங்களிடம் கொள்ளையும் உண்டு ஆதிமைதானமும் உண்டு.
யாரராவது, கமல்ஹாசன் அவர்களின் இந்த அறிக்கையை, தமிழில் மொழி பெயர்த்து பதிவு செய்தால், நன்றாக இருக்கும்.
அய்யா நீ என்ன சொல்ல வருகிறாய் நீ உலக நாயகன் என்பது சினிமாவில் நடிப்போடுசரி அரசியலிலும் உலக நாயகன் அமரிக்க அதிபர் டிரம்புதான். நீ அவருடன் சேர்ந்து ஏதாவது அரசியில் தத்து பித்துன்னு
பேசி போட்டி போடாதே நீ இப்போ சொல்வது ஒன்றுமே புரியவில்லை நீ ராஜ்ய சபா மெம்பர் ஆனபிறகு
ஒரு பெரிய கோமாளி ஹாசனாக மாறிவிட்டாய் நடத்து ராஜாநடத்து உன் காரியத்தை
அப்யா அறிவாளி கமல் அவர்களே. இந்த கச்சா எண்ணெய் அரபு நாடுகள் சும்மா கொடுக்க வில்லை. அமெரிக்க டாலர் அல்லது உணவு பொருட்கள் வாங்கி கொண்டு தான் இங்கே எண்ணெய் வருகிறது. அவர்கள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தினால் உணவு கிடைக்காமல் மக்கள் மாண்டு போவார்கள். உங்களுக்கு உள்ள கரிசனம் அவர்களுக்கும் மக்கள் மீது இருக்க வேண்டும். போரை சும்மா நீங்களும் ஏன் நம்ம பிரதமரே சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அப்புறம் எதுக்கு இந்த அறிக்கை. படபிடிப்பு ஏதும் உங்களுக்கு இல்லையா. இன்னோன்று சாவை பார்த்து உங்களை போன்ற பணக்காரர்கள் தான் பயப்படுவார்கள். ஏழைகள் ஏதும் இல்லாத போது சாவதே மேல் என்று ஏற்றுக் கொள்வார்கள்.