மீண்டும் நழுவிய மொடக்குறிச்சி; தி.மு.க.,வினர் ஏமாற்றம்

ஈரோடு :ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் தற்போதைய தேர்தலில், மெகா கூட்டணி அமைந்துள்ள நிலையில், தி.மு.க., போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என அக்கட்சி தொண்டர்கள் கருதினர். இதற்கு அச்சாரமாக மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.,வுக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனால் தொகுதியை பெற வீட்டு வசதி துறை அமைச்சர் தரப்பினர், இளைஞரணியினர் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நேற்று ஒதுக்கப்பட்டது, தி.மு.க., தொண்டர்களை உற்சாகம் இழக்க செய்துள்ளது.


இதுகுறித்து தி.மு.க., தொண்டர்கள் கூறியதாவது:இம்முறை தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் தொகுதி கை நழுவியுள்ளது. தொகுதியில் கடந்த, 2001 தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 6,332 ஓட்டுகளையே பெற்றது. அந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தி.மு.க., இரண்டாமிடத்தை பிடித்தது. 25 ஆண்டுக்கு பின் மீண்டும் ம.தி.மு.க., தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த நிலையில், அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு அதிமாக இருந்த தொகுதி, கூட்டணி கட்சிக்கு சென்றது கவலை அளிப்பதாகவே உள்ளது. இதனால் தொகுதியில் கட்சி வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement