மர்ம விலங்கு கடித்துஐந்து ஆடுகள் பலி




கோபி, கோபி, காசிபாளையம் அருகே எரம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வானை, 50, விவசாயி. தோட்டத்தில் மூன்று குட்டிகள் உட்பட ஐந்து வெள்ளாடுகளை நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்திருந்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது, ஐந்து ஆடுகளும் மர்மமாக இறன்து கிடந்தன.
கடத்துார் போலீசார் மற்றும் டி.என்.,பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆடுகளை கொன்ற விலங்கு, தெருநாய்களா அல்லது சிறுத்தையா அல்லது வேறு விலங்கா எதுவென்று தெரியவில்லை.

Advertisement