கட்டளை - மாயனுார் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பெரும் அவதி
கரூர்: கட்டளை-மாயனுார் சாலை பல ஆண்டுகளாக, குண்டும், குழியு-மாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்-சத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், கட்டளை-மாயனுார் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டு-புத்துார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரி, கார், வேன்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், பள்ளிகள் மற்றும் அதிக-ளவில் வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள, நீர்த்தேக்க கிண-றுகளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்கநாதபுரம், கீழமாயனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்கள், அடிக்-கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக, சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
-
வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?
-
தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு
-
பிரதமரை வரவேற்கும் குழுவில் அண்ணாமலை பெயர் இருந்ததா?
-
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி