தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து, 13,660 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் வார தொடக்க முதல் நாளான இன்று (மார்ச் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement