பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
சென்னை: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியானது. தர்மபுரியில் அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 18 தொகுதிகளுடன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 30) 15 பேர் கொண்ட பாமக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* பெரம்பூர்- திலகபாமா
* தர்மபுரி- சவுமியா அன்புமணி
* விருத்தாசலம்- தமிழரசி ஆதிமூலம்
* சேலம் மேற்கு- மு.கார்த்தி
* பென்னாகரம்- செல்வம்
* போளூர்- பாஸ்கரன்
* திருப்போரூர்- கே.பாலு
* ஜெயங்கொண்டம்- வைத்தி
* சேலம் வடக்கு- சதாசிவம்
* விக்கிரவாண்டி- சிவக்குமார்
* சோளிங்கர்- சரவணன்
* மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிச்சாமி
* உத்திர மேரூர்- மகேஷ் குமார்
* ரிஷிவந்தியம்- செழியன்
* காட்டுமன்னார்- அன்பு சோழன்
ஏற்கனவே கடந்த 25ம் தேதி 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்தார். அதில் கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) ஆகிய 3 பேரை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தினமலர் தேர்தல் களம் பகுதியில் வெளியாகும் செய்திகளை படியுங்கள்.
செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (8)
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
30 மார்,2026 - 17:36 Report Abuse
இவர்கள் குடும்பமும் அரசியல் கட்சி என்ட்ரி சொல்லி நல்ல சம்பாயகியாம் பண்ணி வீட்டாட்கள். ஜாதி காட்சிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது. .தலைவர் என்று சொல்லி அவர்கள் மட்டும் முன்னேறி விடுவர் சாமானியர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். மக்களே இனியும் ஜாதி என்று சொல்லும் நபர்களை நம்பா திர்கள் 0
0
Reply
Nancy - London,இந்தியா
30 மார்,2026 - 15:17 Report Abuse
0
0
Reply
vee srikanth - chennai,இந்தியா
30 மார்,2026 - 13:56 Report Abuse
முச்சந்தியில் சாட்டையால் அடியுங்கள் என்று சொன்னவர் யார் ? 0
0
Nancy - London,இந்தியா
30 மார்,2026 - 15:51Report Abuse
0
0
Reply
Gurumurthy Kalyanaraman - London,இந்தியா
30 மார்,2026 - 12:21 Report Abuse
அன்புமணி சார், மகன், மகள், ஓன்று விட்ட தம்பி - இப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கும் டிக்கெட் கொடுங்களேன் ப்ளீஸ். அப்பொழுதான் உங்களுக்கும் சுடாலினுக்கும் இருக்கும் வித்யாசம் மழுங்கும். நாட்டின் நலத்திற்காக, பாட்டாளிகளின் நலத்திற்காக உண்மையாகவே பாடுபட்டவர் நீஙகள் என்ற பெயரும் மழுங்கும். சுடாலினுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்ற பெருமை ஓங்கும். 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
30 மார்,2026 - 12:03 Report Abuse
குடும்ப அரசியல் என்று விமர்சனங்கள் செய்து கொண்டு வரும் பாஜக இதற்கு பதில் அளிப்பார்களா 0
0
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
30 மார்,2026 - 14:39Report Abuse
நம்ம பக்த்ஸ் வாய் திறக்க மாட்டாங்க ....ஆனால் திமுக வை வாரிசு அரசியல் னு சொல்லுவாங்க ... 0
0
Reply
shyamnats - tirunelveli,இந்தியா
30 மார்,2026 - 11:30 Report Abuse
மகள், மருமகன், என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தேர்தலில் நிற்க செய்துவிட்டு, உட்கட்சி ஜனநாயகம் பற்றி பேசுவார்கள். அன்புமணி, ராமதாஸ் சண்டையே, எந்த விதத்திலாவது ஒரு கட்சியில் தன் குடும்பத்தினரை பதவியில் வைப்பதற்கான ஒரு நாடகமே . 0
0
Reply
மேலும்
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
-
விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் மனு தாக்கல்
-
வானுார் தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் மனு தாக்கல்
-
அரசு பஸ் கண்டக்டர் தாக்கிய வாலிபர் கைது
Advertisement
Advertisement