சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணி முதல் துவங்கியது. இன்று முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. ஆனால், விடுமுறை தினங்கள் போக 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
இந்த சூழலில், திமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று காலை முதலே வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாக போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேநேரத்தில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழி மனு தாக்கல் செய்தார்.
திமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தொண்டர்களுடன் திரண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்காளர் அடையாள அட்டையின் நகல் இல்லாததால் வேட்புமனு தாக்கல் செய்ய சிறிது நேரம் காத்திருந்தார்.
புதுக்கோட்டை நாதக வேட்பாளர் எழிலரசி ஏர் கலப்பை, ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். நாதக வேட்பாளர்கள் சங்ககிரியில் நித்யா அருண், நாங்குநேரியில் செல்வம், சிவகங்கையில் இந்துஜா ரமேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ராயரும், கரூர் தொகுதியில் நாதக வேட்பாளர் கருப்பையாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
@quote@
253வது முறை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், தவெக தலைவர் விஜயை எதிர்த்து பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். 1988ம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று அவர் தாக்கல் செய்திருப்பது 253வது வேட்புமனுவாகும்.quote
வாசகர் கருத்து (6)
Kumar Kumzi - ,இந்தியா
30 மார்,2026 - 15:29 Report Abuse
பை பை நைனா 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
30 மார்,2026 - 13:56 Report Abuse
வெல்வோம் ஒன்றாக , எல்லோருக்கும் எல்லாமும் , ஓரணியில் தமிழகம் , ஒன்றிணைவோம் வா , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ,உங்களுடன் ஸ்டாலின் , மக்களை தேடி மருத்துவம் , இல்லம் தேடி கல்வி , நான் முதல்வன் திட்டம் , தவ புதல்வன் திட்டம் , புதுமை பெண் , உங்கள் கனவை சொல்லுங்கள் ,No 1 முதலமைச்சர் ஸ்டாலின் இது மட்டும் இன்றி காலை உணவு திட்டம் இப்படி திட்டங்களை செயல் படுத்தியவருக்கே வோட்டு 0
0
Kumar Kumzi - ,இந்தியா
30 மார்,2026 - 15:28Report Abuse
இந்துமத ஜென்ம விரோதியை விரட்டியடிப்போம் இந்துக்கள் ஒன்றாக 0
0
vijay - coimbatore,இந்தியா
30 மார்,2026 - 15:30Report Abuse
நீங்க திராவிட கூட்டத்துக்கு 200 ரொவாய் சார். நல்லா இருங்க சார் 0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
30 மார்,2026 - 13:39 Report Abuse
எப்படியோ விஜய் சொத்து வெளிவரும். ப்ளாக்கில் விற்ற டிக்கட் பணமும் காட்டுவாரா? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
30 மார்,2026 - 13:10 Report Abuse
அருமையான பகுத்தறிவு ஜீவிகள். வளர்பிறையில் ராகு காலம் கழிந்து எமகண்டத்திற்கு முன்பு, மரண யோகம் போய், சித்த யோகத்தில் துவாதசி திதியில் சோமவார ப்ரோதோஷத்தில் வேட்பு மனு தாக்கல். பிரமாதம். நாளை செவ்வாய் கிழமை. எப்படி எங்கள் ராஜதந்திரம். மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு சரியான சவுகடி. இது களிமண் மட்டுமே என்பதை உறுதிசெய்த இருவருக்கும் நன்றி 0
0
Reply
மேலும்
-
இபிஎஸ் சொன்ன பொய்களை புத்தகமே போடலாம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமான பைலட் மீட்பு
-
ரூ.9.5 கோடி தங்க நகை ராமநாதபுரத்தில் பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
Advertisement
Advertisement