செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, கெரகோடஹள்ளியில் செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்-பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்னர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெர-கோடஹள்ளி கிராமத்தில், செலகாரம்மன் - செலக்காரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், கணபதி பூஜை மற்றும் கொடி-யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம் மற்றும் நான்கு கால வேள்வி பூஜை நடந்தது. இதில், யாக-சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கலசத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அதை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து, செலகாரம்மன் - செலக்காரப்பன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்-காரத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதை, சுற்றுவட்டார பகுதி-களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement